search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேசி பழனிசாமி"

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #ADMK #KCPalanisami
    புதுடெல்லி:

    அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ‘அதிமுகவில் பொதுச்செயலாளர் நியமனம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இதன்படி தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும். வேட்பு மனு ஏ மற்றும் பி படிவங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டிருந்தது.


    இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது மனுதாரர் கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதிமுக வேட்பு மனுவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது எனக் கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.  #DelhiHC #ADMK #KCPalanisami
    ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. #DelhiHC #ADMK
    புதுடெல்லி:

    அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளனர்.



    ஆனால், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. #DelhiHC #ADMK
    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ஏற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #ADMK #ElectionCommission #Sasikala
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

    கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி (அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்) தலைமை தேர்தல் கமி‌ஷனில் முறையிட்டார். டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.


    இதற்கிடையே தேர்தல் கமி‌ஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தேர்தல் கமி‌ஷனில் சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது. அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. #ADMK #ElectionCommission #Sasikala
    ஓ.பன்னீர்செல்வம், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி.தினகரனை சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டதாக கே.சி.பழனிசாமி கூறினார். #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது பின்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டனர்.

    அன்றைக்கு சசிகலாவை எதிர்த்ததில் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன்.

    ஆனால் இதில் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார்.

    அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனு‌ஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.

    இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்பட யாரிடமும் சொல்லாமல் அவர் மட்டும் ரகசியமாக சென்று சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.

    இதில் இன்னும் பல கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடை சொல்லாமல் உள்ளார்.

    1. தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை.

    2. கோட்டூர்புரத்தில் யாருடைய வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது?


    3. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது இவருக்கும் நண்பர். அவருக்கும் நண்பர் என்கிறார்கள். அப்படியானால் அவர் தொழில் அதிபரா? அரசியல்வாதியா? அவரைப் பற்றிய விவரங்களை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்.

    4. கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.

    இதையெல்லாம் பார்க்கும் போது தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பி முட்டாள் ஆக்குகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    கேசி பழனிசாமி அளித்த புகார் மனு மீது செப்டம்பர் 13-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KCPalasisamy #HighCourt
    புதுடெல்லி:

    அதிமுக கட்சியின் சட்ட விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்யும்படி கேசி பழனிசாமி அளித்துள்ள மனுவை 4  வாரத்தில் விசாரித்து முடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனு இன்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு எந்த நோட்டீசும் கொடுக்காமல் உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


    ஆனால் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக செப்டம்பர் 13-ம் தேதி வரை கேசி பழனிசாமி புகார் மனு மீது தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது  என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். செப்டம்பர் 13-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது கேசி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #KCPalasisamy #HighCourt
    முன்னாள் தி.மு.க. எம்.பி. கே.சி.பழனிசாமி வங்கிக்கடனை திருப்பி செலுத்தாததால் அவரது ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. #DMK #KCPalaniswami

    கரூர்:

    கரூர் மாவட்டம் காவாலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி. தி.மு.க.வை சேர்ந்த இவர் 1986 முதல் 1991 வரை கரூர் நகராட்சி துணைத்தலைவராகவும், 1990, 1997 ஆகிய ஆண்டுகளில் இரு முறை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

    தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர், 2004-ல், கரூர், எம்.பி.,யாகவும், 2011-ல் அரவக்குறிச்சி, எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த சட்டசபை தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

    அதில், பல கோடி ரூபாய் செலவு மற்றும் தொழில் நஷ்டம் காரணமாக, அவர் மிகவும் சிரமப்படுவதாக, தி.மு.க.வினர் கூறி வந்தனர்.

    கரூர் மாவட்டம் மாயனூரில் பாலித்தீன் சிமெண்டு பைகள் தயாரிக்கும் பேக் கேஜிங் நிறுவனம், புதுச்சேரி மாநிலம் திருவண்டார் கோவில் பகுதியில் காகித ஆலை நடத்தி வருகிறார். இதனை அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி ஆகியோர் இணைந்து கவனித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், அவரது சொத்துகளை கையகப்படுத துவதாக, ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. கே.சி.பழனிசாமி மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகளை அடமானம் வைத்து மாயனூர், புதுச்சேரி நிறுவனங்களில் பெயரில் ரூ.173 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 571 கடனாக பெறப்பட்டுள்ளது.

    கடன் தொகை திருப்பி செலுத்துமாறு வங்கி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் 60 நாட்களுக்குள் கடனை திருப்பி செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறித்த தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தாததால் கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி. பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கடன் தாரர் அடமானம் வைத்து உத்தரவாதம் அளித்த சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. #DMK #KCPalaniswami

    ×